அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.   செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.  தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…

மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com     தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…

மின்னூல் பதிவிறக்க : ‘(உ)ரூபி’ – பிரியா சுந்தரமூர்த்தி

  “எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…