(வெருளி நோய்கள் 629-633: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 634-638 634. கண்ணாடி மேல் நிற்றல் வெருளி  – Stasihyelophobia கண்ணாடி மேல் நிற்பது குறித்த பேரச்சம் கண்ணாடி மேல் நிற்றல் வெருளி. கண்ணாடி உடைந்து விடலாம், கண்ணாடிமேல் நிற்பதால் உடைந்து கீழே விழலாம், காயம் படலாம் உயரத்தளத்தில் கண்ணாடி மீது நிற்பதால் ஏதும் எதிர்பாரா நேர்வு நிகழ்ந்து கீழே விழுந்து உயிர் இறக்க நேரிடலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகிக் கண்ணாடி மேல் நிற்றல் வெருளிக்கு ஆளாகின்றனர். சிகாகோவில் 1353 அடி உயரத்தில் உள்ள…