கலைச்சொல் தெளிவோம் 10 : அதிரி-vibrio

அதிரி-vibrio     அதிர்(14), அதிர்க்கும்(3), அதிர்ந்து(8), அதிர்ப்ப(1), அதிரப்பு (1), அதிர்பட்டு(1), அதிர்பவை(1), அதிர்பு(9), அதிர்வது (1), அதர்வன(1), அதிர்வு(2),அதிர(20), அதிரல்(17), அதிரும்(4) முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம்.   அதிரி-vibrio வைபிரியோ(vibrio) என்பது வளைந்த வடிவமுடைய நுண்ணி(bacteria) என்பதால் வடிவ அடிப்படையில் வளைவி என்று சொல்லலாம். ஆனால், மூலச்சொல் அதன் அதிரும் தன்மையின் அடிப்படையில் குறிக்கப்பட்டிருப்பதால் வளைவி என்பது பொருத்தமில்லை எனத் தவறாக எண்ணலாம். எனவே, மூலச்சொல்லைப்போவே அதிரும் தன்மையின் அடிப்படையில் அதிரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது….

கலைச்சொல் தெளிவோம்! 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  மூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்   மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…

கலைச்சொல் தெளிவோம்! 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

   தோலும் அதளும் – (skin and leather)   தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…