kalaicho,_thelivoam01

vibrio01

அதிரி-vibrio

 

 

அதிர்(14), அதிர்க்கும்(3), அதிர்ந்து(8), அதிர்ப்ப(1), அதிரப்பு (1), அதிர்பட்டு(1), அதிர்பவை(1), அதிர்பு(9), அதிர்வது (1), அதர்வன(1), அதிர்வு(2),அதிர(20), அதிரல்(17), அதிரும்(4) முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம்.

 

அதிரி-vibrio

வைபிரியோ(vibrio) என்பது வளைந்த வடிவமுடைய நுண்ணி(bacteria) என்பதால் வடிவ அடிப்படையில் வளைவி என்று சொல்லலாம். ஆனால், மூலச்சொல் அதன் அதிரும் தன்மையின் அடிப்படையில் குறிக்கப்பட்டிருப்பதால் வளைவி என்பது பொருத்தமில்லை எனத் தவறாக எண்ணலாம். எனவே, மூலச்சொல்லைப்போவே அதிரும் தன்மையின் அடிப்படையில் அதிரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

– இலக்குவனார் திருவள்ளுவன்