(வெருளி நோய்கள் 866-870: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 871-875 குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறியீட்டு வெருளி.கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அல்லது உரையாடுவோர் குழுஉக் குறி முறையில் அல்லது அடையாள முறையில் அல்லது குறியீட்டு முறையில் பேசுவது.கால்கழுவுதல் போன்று இடக்கர் அடக்கலாகச்சொல்வதும் குறியீட்டு உரையேSymbolo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு.00 குறுகிய பகுதி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுகிய பகுதி வெருளி.ஒருவருக்குக் குறுகிய பொருட்கள் அல்லது இடங்களைப் பற்றிய வெருளியை ஏற்படுத்துவது.சான்றாகக் குறுகிய நடைபாதை, அடித்தளம் அல்லது மாடிச்சிற்றறை, அல்லது மாடிப்படிகளின் அடிப்பகுதி,…