தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்! 2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை…

தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி

(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்”…

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்   ஆடி 15, 2047  –  30-7-16 சனிக்கிழமை மாலை 6.00  40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு, மயிலாப்பூர், சென்னை. உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும் பாலசுப்பிரமணியன் 9042905783 சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… காற்சட்டை –  சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடைதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… பாவாடை –  சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… முழுதாய்…

கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும்  கடந்த ஆனி 10, 2047 / சூன் 24,2016 அன்று சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் தொடரிநிலையத்தில் பொறியாளர் ச.சுவாதி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும்  கொலைசெய்தவரை விரைவில் கைதுசெய்துள்ள காவல்துறைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.    பொறி.சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரே வாயில் / தாடையில் / கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னாலிருந்து அரிவாளால் வெட்ட முற்படும்பொழுது கழுத்தில்படாமல் வாயில் அறுத்திருக்கலாம் என முதலில் பலரும் கருதினர். ஆனால்  கொலைக்குற்றவாளி எனக்  குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இராம்குமார்,…

செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி

       (ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம்     நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…

கொலையாளியை அடையாளம் காட்டிய கிளி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேசுவர் பகுதியில் வசிப்பவர் விசய்(சர்மா). உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23- அன்று விசய்  திருமண விழா ஒன்றிற்குச் சென்று விட்டார்.  திரும்பி வந்து பார்த்த பொழுது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம்(சர்மா)(45) மருமமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை அறிந்தார். கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லாமல்  தந்திரமாக நடந்து கொண்டுள்ளான். இதனால்,  தொடர்புடைய சத்தா காவல்நிலையத்தினர்  துப்பு துலக் கமுடியாமல், திணறி வந்தனர். இந்நிலையில் நீலம்(சர்மா) வளர்த்து வந்த கிளி கொலையாளியைக்…