திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! [சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.] அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523) “ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே” புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர்…

புறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல்    பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான்  என்பதும் ஆரியப் புராணம்.  ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.   கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர்.  அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன்  பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…