சட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் 886 – 890 886.Assessment  மதிப்பீடு தீர்வை விதிப்பு ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல். குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை. குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன்…