தோழர் தியாகு எழுதுகிறார்  62

(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி) தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல் பாராட்டே அவமானம்? இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது. அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி)  சொல்லடிப்போம், வாங்க! (6) பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்: தோழர் வணக்கம். என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை. சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன. ‘சொல்லடிப்போம்’ வாங்க இரசித்துப் படிக்கிறேன். தாராளியம் சிறப்பான விளக்கம். நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள். நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன். பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல,…

தோழர் தியாகு எழுதுகிறார் 45: பெரியாரா? பிரபாகரனா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி) பெரியாரா? பிரபாகரனா? தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன?…