(130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் “இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தசுயூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.” இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது. “இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும், படை வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.” இது (உ)ரோமேசு சந்திர டட்டு…