இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்
சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…
இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…
இந்தி முதன்மைத் தனி ஆட்சி – பேராசிரியர் சி.இலக்குவனார்
இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர் அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர். 2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர். 3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது. 4. பாராளுமன்றில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள்…
தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)
தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது. தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது. 42. ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!
குறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழியர் வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும் பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க எங்கும் இன்பம் இனிதே பொலிகவே. – செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 311. அளவைகளும் எடைகளும் பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன. பயன்பாட்டின் போது பெயர்களின் ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…
வள்ளுவர் வகுத்த அரசியல்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள் 732) பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும். நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…
தொல்காப்பிய விளக்கம்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத் தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம்
வள்ளுவர் வகுத்த அரசியல்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 1. நாட்டு இயல் அ. நாடு* நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது
