(சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13 உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்!  “நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க…” ஐங்குறுநூறு – 1, 2திணை: மருதம்பாடியவர்: ஓரம்போகியார் பொருள்: உணவுக் கூலங்கள் (தானியங்கள்) பொலியட்டும் தொழற்கருவிகளுக்கான மாழைகள் (உலோகங்கள்) பெருகட்டும். பண்டைத் தமிழ்நாட்டின் நாகரிக உயர்வையும் பண்பாட்டுச் சிறப்பையும் வரலாற்றுக் கூறுகளையும் விளக்குவன சங்க இலக்கியங்கள் என்பார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். எட்டுத் தொகையும் பத்துப்…