தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019 மாலை 4.00 இடம் : திருக்குறள் பேரவை 22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61 கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன் கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன் அன்புடன் த.மகாராசன் அமைப்பாளர், 24, கலைமகள் தெரு புழுதிவாக்கம்,சென்னை 600 091 பேசி 044 – 2242 1983 ; 98412 91492
அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்
அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! – அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! – அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! – அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? – அருவினை -திருக்குறள்…
