(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி தமிழிசை தழைக்கும்           ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும்              ஏதிலர் தமக்கே இரையா காமல்,   80           தாய்மொழி மானம் தமதென நினையும் ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்                 புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்;        85           தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை;          கூத்தும் பரவுக           கூத்தும் அவ்வணம்…