2014 தமிழிசை விழா
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை Federation of Tamil Sangams of North America இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் Sangeeth Saagar Cultural Trust 10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 2014 தமிழிசை விழா இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 அபிபுல்லா சாலை, வடக்கு உசுமான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 மார்கழி 14, 2045 / 2014 திசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048 நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி…
சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் திருவையாறு தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு இலக்குவனார் திருவள்ளுவன் அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப்…
எல்லா இன்பமும் கிட்டட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை கார்த்திகை 28, 2045 / திசம்பர் 14, 2014
இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 3
(முன் இதழ்த் தொடர்ச்சி) – இலக்குவனார் திருவள்ளுவன் பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது….
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 2
– இலக்குவனார் திருவள்ளுவன் (முன் இதழ்த் தொடர்ச்சி) பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள் மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும் “சில்லறை: என்றும் “உருப்படி” என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம் என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம் போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும் இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர். தமிழின் செம்மொழித் தகுதிகளைத் திறம்படவிளக்கியவர் இவர். “தமிழரிடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயார்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும்; வடமொழியினின்றுமே…
தமிழ்ப்பாட்டு பாடு – இல்லையேல் ஓடு!
இதழுரை இசை என்பது அவரவர்க்கு அவரவர் தாய்மொழியிலான இசைதான். ஆகவே, நமக்கு இசை என்பது தமிழிசையையே குறிக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே முழங்க வேண்டியது தமிழிசைதான். திராவிடம் என்னும் சொல் தமிழைக் குறிப்பதுபோல் கருநாடக இசை என்பதும் தமிழைத்தான் குறிக்கின்றது. ஆனால், கருநாடக இசை என்ற பெயரில் தெலுங்கு, சமற்கிருத, கன்னடப்பாடல்களைத்தான் பாடுகின்றனர். அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழியில் பாடட்டும்! ஆனால், தமிழ்நாட்டில் உலக இசைகளின் தாயாம் தமிழிசையைப் புறக்கணிக்கும் போக்கை இன்னும் எத்தனைக் காலம்தான் தொடரப் போகின்றனர்? தமிழ்நாட்டிலும் பிற மொழி பேசுவோர் தம்…
தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பிற நாடுகளில் சிற்சில காலங்களில் அயல் இசை ஆதிக்கப் போக்கு இருந்திருந்தாலும் தாய் இசையின் உரிமையை மீட்டெடுத்துப் போற்றிவருகிறார்கள். இங்கிலாந்தில்கூட 200 ஆண்டுகள் செருமானிய இசை மேலோங்கிய…