திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின? தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி…

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல்…

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை

(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 3.குமுகாய அமைப்பு ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர்  இந்நாட்டில்  குடியேறிய  பின்னரே  பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்”  என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை….

வெருளி நோய்கள் 1141-1145: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1136-1140: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1141-1145 செவ்வாய்க் கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வாய்க் கோள் வெருளி.கணியம் அல்லது சோதிடம் என்பது உண்மையானால் செவ்வாய்க்குரிய நற்பலன்கள் மீதும் நம்பிக்கை வரவேண்டும்.ஆனால் பணத்தைக் கறப்பதற்காகச் “செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய்த் திசை வந்தால் துன்பங்களும், இன்னல்களும் நேர்ச்சிகளும்(விபத்துகளும்) வந்து சேரும்” என்றும், “செவ்வாய்க் கோளானது அது அமர்ந்த வீட்டுக்கும் அது தொடர்பு பெற்றிருக்கும் இடங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்” என்றும் சொல்கின்றனர். இதற்குக் கழுவாயாக/பரிகாரமாக ஏதேனும் செய்வதாகச் சொல்லிப் பணம்…

உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்

(க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் – தொடர்ச்சி) தமிழ்நாடு உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம்.தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது.தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க நடுவணரசு ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக.தமிழ்நாட்டில்…

3 ] தமிழ்நாடு ,    க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

  (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடுக. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி வாழ்நதனர்.சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை…

நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 17.    நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு. சரியா? o     நான்கு வருணத்தவருக்கும் பூணூல் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று சொல்கிறார்களே!      சடங்குகளைப் பிராமணன்தான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது சடங்கிற்குரியோர் பூணூல் அணிய வேண்டும் எனச் சனாதனம் வலியுறுத்துவதால்,…

சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(வருணங்கள், செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்) சனாதனம் பொய்யும் மெய்யும்: 16 ? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!      சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே…

வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள் – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 14-15 14.     வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? ?       இந்த வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையைத், தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. – இவ்வாறு இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?        இவ்வாறு…

“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்

(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13 10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.        ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள். வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி…

தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!  இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு  தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின்…

1 2 4