இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை  கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப் பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம் – புலவர் குழந்தை : இராவண காவியம்  

சங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர்

  ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ்வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாகும். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர்மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். – க. வெள்ளைவாரணர்…