ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும்- இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517)  என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஒளவை ந. அருள் திகழ்கிறார். சில…

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர்  மாலை அணிவித்து வணக்கம்     தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார்.   இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர்  த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன்  தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற  நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…