இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி) 14 நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார். ‘ நெல்லைக்குரிய நீள்கல் லூரியில் பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16 நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப்…
இலாத்துவிய மொழியில் திருக்குறள்!
இலாத்துவிய மொழியில் திருக்குறள் காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram). இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை! ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…
1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்)
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 4: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி) 04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால் ஓதிநீ மாநி…
300 திருக்குறள்களை ஒரே நாளில் பயிலப் பொள்ளாச்சி நசன் வழிகாட்டுகிறார்!
ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க… 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க… கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன், திரு பல்லடம் முத்துக்குமரன், திரு. ஐயாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்துமாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு உரிய பொருளை…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு
01. அறத்துப் பால் 001. அதிகாரம் 01. பாயிர இயல் 001. இறைமை வழிபாடு மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள். அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு. எழுத்துக்களுக்கு, அகரம் முதல்; உலகினுக்கு, இறைவன் முதல். கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின். தூய அறிவன்வழியைப் பின்பற்றாத சீரிய கல்வியால், பயன்என்….? மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார். மலரைவிட,…
திருவாசகத்தில் திருக்குறள் – பால.சீனிவாசன் உரை
ஆனி 28-30, 2046 / சூலை 13 -15,2015 இரவு 7.00 8.30 சென்னை அருள்மிகு கமல விநாயகர் சத் சங்கம் புரசைத் திருநெறிக்கழகம்
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்
திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். நீங்கள் என்ன சமயத்தார்…
திருக்குறள்போல் ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லை – நாமக்கல் கவிஞர்
உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லா திருக்கும். அதுமட்டுமன்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லையென்று உலகத்தின்…
அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி
இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன். தொன்மை நூல்களெல்லாம் – நன்கு துருவி ஆராய்ந்து, நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான். எதை மறந்தாலும் – உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த – தேவன் பொய் சொல்லாப் புலவன். அறிவின் எல்லை கண்டோன் – உலகை அளந்து கணக்கிட்டோன்;…
திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)
திருக்குறளும் தொடர்பாடலும் தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ஒரு பகுதி திருக்குறளில் தொடர்பாடல் பற்றி என்ன சொல்கின்றது என அறிந்துகொள்வதாகும். மனித இன முயற்சியின் இன்றைய மிகப்பெரும் வளர்ச்சி எது என்று கேட்டால்…
