ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
தமிழ்க்கூடல், 22.12.2020
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1
திருவள்ளுவர்: 1 சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து…
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54 கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் பொருள் உரை திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள் சொல்: கடுகு கடுகு =…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 5
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) 10.3. கபிலர் பாடல் — 05 தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி ] பொருள் உரை தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர்…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 4
(மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி) 10.2. இறையனாரதுநிறைபாடல்— 03 சொல்தொடர்: என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். பொருள்உரை எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள். நுட்பங்கள் சொல்: தேன் தேனின்மருத்துவக்குணங்கள் கண்பார்வையைத்தெளிவாக்கும் ]இருமலைத்தீர்க்கும குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும் குருதியைத்தூய்மைப்படுத்தும் கொழுப்பைக்குறைக்கும் இதயத்தின்ஆற்றலைக்கூட்டும் தேன்உடல்நோய்களைத்தீர்க்கும். திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து. தேன்…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 3
(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி) 10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள் திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்., 10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்] [உருவம்இல்லாததெய்வஒலி] சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர் திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது. நுட்பங்கள். திருக்குறள் உலகுதழீஇய…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 6.0. சொல்நுட்பத்தகவு நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள். ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித்…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள் – பகுதி 1
முப்பாலுக்[கு] ஒப்புநூல்எப்பாலும்இல்லையால், அப்பாலைஎப்போதும்செப்புதலும், — அப்படியே ஒப்புடன்வாழுவதும், செப்பரியவாழ்வுதரும்; எப்பாலும்தப்பாச்சிறப்பு. [வல்லிசைவண்ணத்துநேரிசைவெண்பா] – பேராசிரியர் வெ.அரங்கராசன் 1.0. நுழைவாயில் பழம்பெரும்நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே போற்றுதலுக்கும், ஏற்றுதலுக்கும் உரிய திருவள்ளுவமாலை என்னும் ஓர் அருந்திறனாய்வுப் பெருநூல் கிடைத்துள்ளது. அந்நூல் 53 ஆற்றல்மிகு புலவர்களால் ஆக்கப்பட்டது. அப்பெரும்புலவர்கள் திருக்குறளை அணுகியும், நுணுகியும், வீழ்ந்தும், ஆழ்ந்தும் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்கள்; அதில் தோய்ந்தவர்கள்; கூர்ந்து ஆய்ந்தவர்கள்; ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்கள்; நுண்பொருளையும் எண்பொருளாகக் கண்டவர்கள்; அதை மனத்தே…
