தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்
சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…
திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா
பேரன்புடையீர்! வணக்கம், வருக! (திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி) திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி இராசாராம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம், சென்னை-100. 27 ஆம் ஆண்டு விழா திருவள்ளுவர் சிலை திறப்பு : உ.சகாயம், இ.ஆ.ப. பள்ளியின் நூலகத் திறப்பு: திருவாட்டி இந்துமதி வசந்தகுமார் மேல்கட்டடத் திறப்பு: எழுத்தாளர் அசயன் பாலா கணிணிமையத் திறப்பு: திரு.ச.அரங்கநாதன் சான்றோர்களின் வாழ்த்துரைகளும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. சிறப்புமிகு விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இங்ஙனம்: ஆசிரியர்கள் – மாணவர்கள்….
உணவுத்திருவிழா, மேடவாக்கம்
பெருந்தகையீர்! அனைவரும் வருக! ஏழை, எளிய மக்களுக்கான இயற்கை உணவுத்திருவிழா! நம் மரபு நாட்டு உணவுகளை எளிய உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி! உணவே மருந்து! மருந்தே உணவு! என்பது நம் தமிழர்களின் சிறந்த உணவு முறையாகும். அதனால் உடலில் எதிர்ப்பாற்றல் பெற்று உடல் நலத்துடனும் வலத்துடனும் வாழ்ந்தனர். ஆனால், இன்று புதிய புதிய உணவு மாற்றங்களால் புதிய புதிய நோய்கள் நம் உயிரைக் குடிக்கின்றன. ஊட்டச்சத்தும் எதிர்பாற்றலும் நிறைந்த நம் நாட்டு உணவு முறைகளைப் பின்பற்றுவோம். அனைவரும் வாருங்கள்! வந்து உணவுத்…
