இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…
வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஈ. படைச்செருக்கு படைச் செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி. 1. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (குறள் 771) [என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்.] தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து,…
ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்
காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம். மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத்…
வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண் சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம். நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…
வள்ளுவர் வகுத்த அரசியல்
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள் 732) பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும். நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…
