தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! “திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் பெருகி வருவதால் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை என்பதே தொன்மையான கருத்து. அருவமான கடவுளை வழிபடுவதற்காக ஒளி வழிபாட்டைப் பின்பற்றியிருக்கிறார்கள். மரபு வழியிலான ஒளி…

இந்து வாழ்வியல் அறமும் + 64. அனைத்து உயிரும் ஒன்றே என்பதுவுமே தமிழ்ச்சனாதனம் என்கிறாரே சேக்கிழான். – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 -. தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக் கர கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே’ இவர்களின் பணிக்குச்(!) சான்றாக ஒரு நிகழ்வைக் காண்போம். கருநாடக மாநிலம் சாம்ராசுநகர் மாவட்டம் சுலவாடி ஊரில் மாரம்மா கோயில் உள்ளது. சாளூர் மடத்தின் பெரிய மடாதிபதி குருசாமி. இதன் இளைய மடாதிபதி மகாதேவசாமி. இருவருக்கும் அதிகார மோதல் இருந்து வந்துள்ளது. மாரம்மா கோயில் பொறுபப்பாளர்களுள் ஒருவரான மாதேசு என்பவரின் மனைவி…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை,  பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…

மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள்   கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றிகூறிப் பாராட்டுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும மும்மதி…

பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்! – மாணிக்கவாசகர்

பன்னருஞ்சிறப்பிற்குப் பொன்னடி பணிக அறமுதல் அரியெனும் அவனே பரனே அணுவினுள் அவனே செகமுணர் பரனே மனனே கரிசொல வருபுயல் பரனே அமுதரு ளினனே யவனே பரனே நிலனே வானே நிறைமுதல் பரனே வலனே தரிதிகி ரியனே பரனே இன்னணம் அமைதரல் இறையரங் கேசனைப் பொன்னடி பணிபவர் புகுபதி பன்னருஞ் சிறப்பில் பரந்தா மமதே பலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம் நிலம், நீர், நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன் புலன்ஆய மைந்தனோடு என்னவகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகுஏழ் என திசைபத்து என தான்…

இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்

5  இறையே ஏற்பாயாக! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!   மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம்.   “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக…