விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது. இவற்றை…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 அடுத்த வாரமே  குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர். ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர்…

மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க!– இலக்குவனார் திருவள்ளுவன்

மாணவப் பருவக் காதல் கதைகளையும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் தடை செய்க! ஒருதலைக்காதலால் அல்லது ஒருதலை விருப்பத்தால் கொலைகள் பல பெருகி வருகின்றன.  காதலுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் காதலுக்காக மற்றவரின் உயிரை எடுக்கலாமா? எனக்குக் கிடைக்காத பெண் அல்லது சிறுபான்மை ஆண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசைப்படும் பொருளாகக் கருதி, மறு தரப்பாரை கழுத்தை அறுத்துக் கொல்வது, எரித்துக் கொல்வது, வேறு வகையில் கொலை செய்வது, முகத்தில் அமிலம் ஊற்றிச் சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெருகி வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள்…