(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள், 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 427) அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர். அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம். “கண்ணுக்கு முன்னால்…