தமிழ்நாடும் மொழியும் 39: நாடகத் தமிழ்

(தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – தொடர்ச்சி) நாடகத் தமிழ் தொடர்ச்சி பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால்…

தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது; இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கருனாடக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக்குச் சிறிது ஏற்பட்ட இசையே…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17

  (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 5/17   காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானைபாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினேபீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானைகள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை       (21) செந்தமிழ்த் தெய்வத்தைச் சிறந்தநம் முன்னோர்கள்பைந்தமிழ்ப் பண்களால் பாடினர்காண் அம்மானைபைந்தமிழ்ப் பண்களால் பாடினரே யாமாகில்இன்தமிழில் இசையில்லை என்பதேன் அம்மானைஎன்பவர் ஆராய்ச்சி யிலாதவரே யம்மானை       (22) ஒருகால் உரைத்தாலும் உவப்பளிக்கும் தமிழிசைகேட்(டு)உருகாத உயிர்ப்பொருளே ஒன்றுமில்லை…