110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த…