தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத வாழ்வு கண்ட தமிழகம் மகிமை கெட்டே அடிமைப் பட்டு மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு செல்லடா!…
