தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…
மழை ஏமாற்றியதால் குறைந்து வரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்
தேவதானப்பட்டி பகுதியில் மழை ஏமாற்றியதால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் குறையத்துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்தது. இதனால் தலையாறு, வறட்டாறு, மூலையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகமானது. இதனையொட்டி வறண்டு காணப்பட்ட எலிவால் அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இருபது அடிக்குக் கீழ் இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மளமளவென 40 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல்மழை பெய்தது. அப்போது மேகங்கள் திரண்டு இருந்தாலும் காற்று…
