வந்தவாசியில் முப்பெரு விழா

வந்தவாசியில் முப்பெரு விழா   வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/  சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.         இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.        இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.          குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள், உலக இரத்தத்தான நாள், போதைப் பொருள்- சட்டவிரோதக்…

புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்

புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள்  – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு – வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும்  இணைந்து  தேசிய நூலக வாரப் பொன் விழா  நடத்தின.   இவ் விழாவில், பாடப்புத்தகங்கள்  தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்  மரு.எசு.குமார் குறிப்பிட்டார்.         இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர்…

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு

குறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன   – கவி மு.முருகேசு நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்) புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன                    – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு           வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை  அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற  குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி  நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய  ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர்…

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே!       வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.         வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…

பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா

50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா:  சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார்      வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு  வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.      இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.     விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…

படிப்பதால் மட்டுமே விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்! – கவிஞர் மு.முருகேசு

புத்தகம் படிப்பதால் மட்டுமே குமுகாய விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்!     – உலகப் புத்தக நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு   வந்தவாசி.ஏப்.17. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால்மட்டுமே  குமுகாய(சமூக) விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.      இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.  ஊர்…

சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமை

சமூக மாற்றத்திற்கான சிந்தனையை விதைப்பது  எழுத்தாளர்களின் கடமையாகும்  வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் உரை            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில் (புரட்டாசி 17 / அக்.04) சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.          கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன்,…

பகுத்தறிவைத் தூண்டுவன புத்தகங்களே!

புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன.           வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்    கரூர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு               வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.        இவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை…