(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி)

1047. Appreciationஆராய்தல்‌;
பாராட்டுதல்‌;
மதிப்பிடுதல்‌;
விளங்கிக்கொள்ளுதல்

சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும்.

இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது.
1048. Appreciation of evidenceசான்றின்‌ மதிப்பீடு

சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள்.

சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின் ஏற்கத்தக்க தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.
1049. Apprehend  அச்சத்தோடு எதிர்பார்
தளையிடு
கைது செய்
புரிந்துகொள்  

பெரும்பாலும் குற்ற வழக்குகளில், சட்ட அதிகாரத்தினால் ஒருவரைப் பிடித்தல் அல்லது தளையிடுதல் என்பதைக் குறிக்கிறது.  இது குற்றவாளியைக் கையோடு பிடிப்பதைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் காவல் அறிக்கைகளிலும், தளையாணைகளிலும் பதிவு செய்யப்படுகிறது.
1050. Apprentice  தொழில் பயிலுநர்

விற்பனை மேம்பாட்டு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 1976, பிரிவு 2.ஈ. [The Sales Promotion Employees (Conditions Of Service) Rules, 1976,Sec. 2(d)] பணியாளர்களுள் தொழில் பயிலுநர்களும் அடக்கம் எனக் குறிக்கிறது. (S. 2(d) SPE(CS)A, 1976)