கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்

(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்…

கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்

(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…

வெருளி நோய்கள் 742-745: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 741: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 742-745 கருத்தடை உறை குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் காப்புறை வெருளி.காண்டம்(condom) என்னும் சொல் மதிப்பு என்னும் பொருளுடைய காண்டசு(condus) என்பதிலிருந்து வந்தது என்பர் சிலர். சார்லசு இரண்டாம் அரசர் மன்றத்தில் பணியாற்றிய, இதனைக்கண்டு பிடித்த திரு.காண்டம் என்பவரின் பெயரையே சூட்டியுள்ளதாகச் சிலர் கூறுவர்.உறை என்பதே காப்பிற்குத்தானே. எனவே, கருத்தடைக்கான காப்பு உறை என்பதையே சுருக்கமாக உறை எனக் குறிப்பிட்டு உறை வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். உறை வெருளி என்பது மடலுறை வெருளி(Fakelophobia) என்னும் பொருளையும்…

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

(க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன்…

வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 739-740 காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என…

வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 729-733 729. காசாளர் வெருளி – Tamiaphobia காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி. கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள். 00 730. காசு வெருளி – Cuprolaminophobia காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி. காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர். Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )…

வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 724-728 கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.கல்+நெய் = கன்னெய்.கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல் 2/5

வெருளி நோய்கள் 723 கனவு வெருளி: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 723 723. கனவு வெருளி-Oneirophobia கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி. கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி. உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு…

வெருளி நோய்கள் 719 -722 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 714 -718 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 719 -722 719. கற்பழிப்பு வெருளி – Esodophobia/Primeisodophobia/ Virginitiphobia/ Virgivitiphobia  கற்பழிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற அளவுகடந்த பேரச்சம் கன்னிமை வெருளி. கற்பழிப்பு வெருளி, கற்பிழப்பு வெருளி, கன்னியமை யழிப்பு வெருளி, கன்னிமை வெருளி என நால்வகையாகக் குறிப்பிட்டாலும் பொருள் ஒன்றுதான். எனவே சேர்த்தே தரப்பட்டுள்ளது. தனியாகவோ, கூட்டாகவோ கற்பழிக்கப்படுவோம் என்ற பேரச்சத்திற்கு ஆளாகி இரவில் வெளியே செல்வதைத் தவிர்ப்பர். இது போன்ற செய்திகளைப் படிப்பதாலும் பார்ப்பதாலும் அறிந்தவர்க்கு இத்துன்பம் நேர்ந்துள்ளதை அறிய…

க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார்

(க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர்க௪. தமிழர் என்றும் ‘இந்தி’ யை ஏற்கமாட்டார் வடஇந்தியர் “தேசிய ஒருமைப்பாடு, தேசிய மொழி பாரதம் ஒரே நாடு” என்றெல்லாம் பேசி இலக்கிய இலக்கணமற்ற, தனக்கென்று எழுத்தில்லாத எண்ணூறு ஆண்டுக்குள் தோன்றிய பண்படாத மொழியாகிய “இந்தி” மொழியை இந்தியத் தேசிய மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்குவதற்கு முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.தென் மாநிலங்களின் மக்கள் இந்தியை ஏற்க அணியமாயில்லையாயினும், பேராயக் கட்சியினர் ஆட்சி புரியும் மாநிலங்களில் தற்பொழுது மும்மொழிக் கொள்கையை…

1 2 98