(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 15 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 16 கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக அரண்மனையைக் கட்டி எழுப்புவது குறித்து மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் நெடுநல்வாடை என்னும் இலக்கியத்தில் கூறி உள்ளதைப் பார்த்தோம். தொடர்ச்சியை இப்பொழுது காண்போம். வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாயில்திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்வாடை : 87—90) வெற்றிக்கொடியை யானைமீது அமர்ந்து பிடித்து உலா வருவது வழக்கம். அக் கொடி தாழவோ சாய்க்கவோ…