ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?     ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள  பாரதி பூங்காவில் அமைந்துள்ளது.    இந்த ஆயி மண்டப முகப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரை விழுந்து சேதமடைந்ததால் சரிசெய்ய  பாெதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டது. ஒப்பந்தக்காரர் மூலம் பணிகள் மேம்போக்காக அரைகுறையாகச் செய்யப்பட்டதன் விளைவாக ஒட்டப்பட்ட காரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது. இதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று…

தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி மின்தடை

  தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர்   தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அவ்வப்பொழுது இயக்கப்படும் மின்கருவிகள்,  உழவர்களின் மின்னியந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்பொழுது அதிக மின்அழுத்தத்துடன் வருகிறது. இதனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், தண்கலன், மின்…

மழையால் சேதமடைந்த சாலைகள்

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தல்   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.   தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு வரை செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து காமக்காபட்டி செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்கின்ற சாலையும் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.   மேலும் சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் கடையில் மழைத்தண்ணீர் தெளிக்கக்கூடாது என்பதற்காகச் சாலைகளில் கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால்…