(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)     அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7     நீடூர்                 எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,                 “யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்                 …………..எவ்வி ஏவல் மேவார்”                           (அகநானூறு 260)                 “பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன”            (அகநானூறு 366)…