“பைந்தமிழ்ச் செம்மல்” விருது புதுவை மு.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பெற்றது

  ஆனி 04, 2047 / 18-06-2016 அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம்,  நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து  வானவில் விழா நடத்தின.   புதுவைத்தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன்  சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி இவ் விழாவில் “பைந்தமிழ்ச் செம்மல்” விருது அவருக்கு வழங்கப்பட்டது.    பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமர சிகாமணி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிறுவனத் தலைவர்…

பூவரசி விருதுகள் வழங்கு விழா, சென்னை

  சென்னை பூவரசி அறக்கட்டளை, பூவரசி ஊடக நிறுவனங்களின் சார்பாகப் பூவரசி விருதுகள் வழங்கும் விழா சென்னையில்  நடைபெற்றது .      இலக்கியம், இசை, சமூகத் தொண்டு போன்ற பிரிவுகளில் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.   இலக்கியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவை செய்துவருவதைப் பாராட்டிப், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் கவிஞர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியனுக்குத் திரைப்பட இயக்குநர் மீரா.கண்ணன் ‘பூவரசி மக்கள் விருது’ வழங்கினார்   விழாவில் நடிகர் சாருகாசன், இயக்குநர் சனநாதன், எழுத்தாளர் பிரபஞ்சன், புதுவைத்…

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் விழா,  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.   விழாவில்  பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர்   புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்   துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு  துணைச்செயலர்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 /  26-12-2015  நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு,  துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில்  கவியரங்கம்…

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரதாசு சுவாமிகள் விழா

நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா   புதுவைத் தமிழ்ச் சங்கம் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கார்த்திகை 19அ 2046 / திசம்பர் 05, 2015 அன்றுநடைபெற்றது.   புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத்  துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால்  பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர்…

புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச் சுடர் விருது

   புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது.        விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற நிறுவனர் திருமதி கலாவிசு, புலவர் இரெ.சண்முவடிவேல், கவிஞர் பைரவி தொழிலதிபர் கணேசன் ஆகியோர் உள்ளனர்

புதுவைத் தமிழ்ச் சங்கம் : மகளிர் நாள்

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் நாள் விழா விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.     கருத்தரங்கத்தில் புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் இளமதி சானகிராமன், புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், புதுவை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முனைவர் வித்யா இராம்குமார், புதுச்சேரி வாழும் கலை ஆசிரியர் எம்.தையல்நாயகி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.     துணைத்தலைவர்கள்…

உலகத் தாய்மொழிநாள், புதுவைத் தமிழ்ச் சங்கம்

   புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.    புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார்    புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார்   புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி

  புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல் ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது. அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார். செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார். இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.