தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்
தமிழியக்கம் ஓய்ந்ததே! இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யாம் வாழும் நாளே! நில்லா உலகில் நிலைத்த புலமையும் எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும் பல்லாயிரம் நூல் படைத்த திறமும் ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே! கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும் ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்; காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே! மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய் புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய் இலக்கிய ஆர்வலர் கலக்கம் போக்கித் துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி;…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…
முற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
முற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்! “இதற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைப்போம். இனி வேறு பேசுவோம்” என்றால் இதுவரை பேசிய செய்தி்யை இனித் தொடர வேண்டா எனப் பொருள். இவ்வாறு நாம் பேச்சு வழக்கில் ஒன்றை முடிக்கக் கருதும் பொழுது முற்றுப்புள்ளி என்பதைக் கையாள்வோம். ஆனால், இப்பொழுது கூறப்போவது இதுபற்றியல்ல. செய்தி எழுதுநர், அழைப்பிதழ் எழுதுநர், கட்டுரையாளர், கவிஞர் என யாவரும் அழகு என்று தவறாக எண்ணியோ, இதுதான் சரி என்று பிழைபட எண்ணியோ முற்றுப்புள்ளி இட வேண்டிய…
குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன்
1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா! குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா! பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா! பறையின்றி நடைபோடும் படையே அம்மா! உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா! ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா! பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ! 2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள் நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச் செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்? செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக் கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும் குலையாமல் தளராமல் தமிழைக் காத்த அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை, அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம்…
