சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…