தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சியா? – பெ.மணியரசன்
தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், ‘உலகத் தெலுங்கு மாநாட்டில்’ பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017இலிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடந்தது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா(நாயுடு) குத்துவிளக்கேற்றித் தொடங்கி…
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்: படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்
மார்கழி 01, 2048 சனி திசம்பர் 16ஈ 2017 மாலை 5.30 க.க.நகர், சென்னை 600 078 தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்: படிப்பு வட்டம் – திறனாய்வுக்கூட்டம்
தமிழ்ப்பல்கலைக்கழக நிலத்தை, இந்தி சமற்கிருதப்பள்ளிக்குத் தாரை வார்ப்பதா? – பெ.மணியரசன் கண்டனம்
சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்! தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981…
இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! – பெ. மணியரசன்
இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் – என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள். இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி மொழி; மற்ற மொழிகள் இந்தி மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய் இருக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாபு(முகர்சியின்) கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும் நடுவணரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன….
ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!
தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம் ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை! ஆந்திரத்திலிருந்தும் கருநாடகத்திலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான பாரம்(டன்) நெல்லை, தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் அரைவை ஆலைகளுக்குத் தனியார் வணிகர்கள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் காவிரி நீர், பாலாற்று நீர் தடுக்கப்பட்ட நிலையிலும் கடுமையான வறட்சியிலும் உழவர்கள் பெருஞ்செலவு செய்து உற்பத்தி செய்த நெல், விலை போகாமல் தேங்கிக் கிடக்கிறது. கடும் உழைப்பைச் செலுத்தி விளைவித்த…
‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார். சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…
காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…
தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட ஒத்துழையாமை – காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை தஞ்சையில் – காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் “காவிரி முதலான தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது” எனத் தஞ்சையில், ஐப்பசி 03, 2047 / 19.10.2016 அன்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கூட்டத்திற்குத், தலைமை தாங்கினார். தமிழர் தேசிய…
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும்! – பெ. மணியரசன்
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசுவிழிப்போடு செயல்பட வேண்டும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வேண்டுகோள் காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் (புரட்டாசி14, 2047/30.9.2016) கருநாடக அரசின் சட்டமுரண்செயல்களையும் நீதிமன்ற அவமதிப்புச் செயல்களையும் கடுமையாகக் கண்டித்தது ஆறுதல் தருகிறது. நீதிபதிகள் தீபத்துமிசுரா யூ.யூ.இலலித்து அமர்வு, இது கடைசி எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு அட்டோபர் 1 முதல்6 வரை தமிழ்நாட்டிற்கு நொடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று கருநாடகத்திற்குக் கட்டளை இட்டிருப்பது வரவேற்தக்கது. நடுவண் அரசு அட்டோபர் 4 க்குள் காவிரி மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுஅமைத்து அறிக்கை தரவேண்டுமென்று கட்டளை இட்டிருப்பது பாராட்டுக்குரியது. காலந் தாழ்ந்த நீதி என்றாலும் தமிழ் நாட்டிற்குப் பயன் தரும் தீர்ப்பாகும். இதற்காகப் போராடிய, வாதாடிய அனைத்து உழவர் அமைப்புகள்,அனைத்து வணிகர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அனைவர்க்கும்இந்த வெற்றியில் பங்கிருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனக்கான தலைமை வழக்கறிஞராகச் சேகர் நபாதே அவர்களை அமர்த்தியதிலிருந்து நம் தரப்பு வாதம் கூர்மையாக எடுத்து வைக்கப்பட்டது. நடுவண் நீர் வளத்துறை அமைச்சர்…
காவிரித் தீர்ப்பு: நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள்! – பெ.மணியரசன்
காவிரித் தீர்ப்பு: வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்சநீதி மன்றம். நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே ! காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை. காவிரிவழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு கருநாடக அரசின் சட்ட முரண் செயல்களையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் நடவடிக்கைகளையும் மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. கருநாடகச் சட்டப்பேரவை மற்றும் மேலவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றிய கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் பதிவு செய்யும்…
அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன்,…
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது. நேற்று (21.09.2016)…
