65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66. சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா? : இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 ? 65 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள்- 43)உலக வாழ்வை நீத்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐவகையினரையும் காப்பதே இல்லறத்தான் பணி என்கிறார் திருவள்ளுவர். இதுவே தமிழ் கூறும் சனாதனம் என்கிறாரே சேக்கிழான். தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப்…
குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…
குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன?- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 5. தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன? செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 420) செவி மூலம் பெறும் கேள்விச் செல்வத்தின் சுவையை உணராதவர்கள், வாய் மூலம் பெறும் உணவுச்சுவையை மட்டும் விரும்புபவர்கள் இறந்தாலும் என்ன? உயிரோடு இருந்தாலும் என்ன? தகவலியலறிஞர்கள் கேள்வியறிவு உடையவர்களே வெற்றிகரமான தலைவர்களாகவும் தொழில் தலைவர்களாகவும் உள்ளனர் என்கின்றனர். இரிச்சர்டு…
கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்
கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்
திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…
பேராசிரியர் சி.இலக்குவனார், தினமலர்
கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! – தங்க. சங்கரபாண்டியன்
கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்! ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929 – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார். …
அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…
பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்,திருநகர், மதுரை 625006
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00 இலக்குவனார் இல்லம் முன்பு 4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006 9 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன. தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர். அன்புடன் இரா.பா.முருகன்…
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 20, 2048 / 05.09.17 செவ்வாய் மாலை 6.00 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் தலைமை நினைவுரை : முனைவர் மமைறலை இலக்குவனார் நினைவுப் பாமாலை : கவிச்சிங்கம் கண்மதியன் அரிமாப் பாவலர் கா. முருகையன் கவி முனைவர் இளவரச அமிழ்தன் எழுச்சிப்பாவலர் வேணு.குணசேகரன் கெ.பக்தவத்சலம், செயலாளர்
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன். 60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும். அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை. வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7 “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…
