வெருளி நோய்கள் 441-445 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 436-440 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 441-445 உருள்வளிக் கோள்(Uranus) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருள்வளிக் கோள் வெருளி.ஆரிய மூடத்தனங்களுக்கு முன்னோடிக் கிரக்க உரோமானிய மூடத்தனங்கள் ஆகும். இயற்கைக் கோளான உரேனசை சனியின் தந்தை என்றும் வியாழனின் தாத்தா என்றும் கருதினர். இவரின் மனைவி பூமிக்கடவுளான கையா. இருவருக்கும் நூறு கைகள் கொண்ட நூற்றொரு கையர்(Hecatoncheires/எகாடோஞ்சிர்கள்), ஒற்றைக் கண் கொண்ட ஒற்றைக் கண்ணன், பேருருவன் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுக்கு அஞ்சி இவர்களையே பாதாளச்சிறையில் உரேனசு…
