(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21 வாழ்க்கைக்கான பொருளைத் தேடு. அதே நேரம் வாழ்க்கையின் பொருளை இழக்காதே! புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல் அன்பு அன்று –பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1 “புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல்  “ அகறல் = அகலுதல் = பிரிதல் அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத்…