என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 11. மனமும் இனமும் செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை,…