மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி
மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்! இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்…
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள, தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம் நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம். …
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில் கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…
