மன்னர் மன்னன்: ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!

(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்! பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.           இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை  பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல்  பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர்…

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம்  அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.   தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…

பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

பாரதிதாசன் 126ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி

சித்திரை 16, 2047 / ஏப்பிரல் 29, 2016 காலை 10.00 அனைத்திந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் விருது வழங்கல் முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் இதயகீதம் இராமாநுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…