சொற்குற்றம் வராமல் காத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சொற்குற்றம் வராமல் காத்திடுக!   அரசியலில்  இந்நாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பெண்கள், தொண்டர்கள் என்ற வேறுபாடின்றித் தரங்குறைந்து பேசுவதும் அதற்கெனவே கேட்கும் கூட்டம் ஒன்று இருப்பதும் தரக்குறைவாகப் பேசுவதற்கென்றே சிறப்புப் பேச்சாளர்களை வைத்திருப்பதும் இயல்பான  ஒன்றாகப் போய்விட்டது.   ம.தி.மு.க.தலைவர் வைகோ கடந்தவாரம் (24.03.2047 / 06.04.2016) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்திரகுமார் என்பவர் தே.தி.மு.க.விற்கு இழைக்கும் வஞ்சகம் குறித்தும் துணைநிற்போர் குறித்தும் கூறும் பொழுது ‘இதற்கு அதைச்செய்யலாம் என்பதுபோல்’ தவறாகப் பேசிவிட்டார். இதற்கு அவர் வருந்தி மன்னிப்பு…

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…