நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி) அறம் புரிந்து அருளாளர் ஆகுக ! தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். -நாலடியார், செல்வம் நிலையாமை, 7 பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர் சொல்…
நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…