செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2   ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ்…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்  1/2   பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம்.   அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….