தமிழ் அமைப்புகள் நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் – 18.05.25

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௨௰௮ – 28) தமிழ்க்காப்புக் கழகம் பிற அமைப்புகளோடு இணைந்து நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் ஈகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடிய“ ஞாலத்தலைவர் மேதகு…

பாவலர் மு.இராமச்சந்திரனுக்குத் தமிழ் எழுச்சிப் பாவலர் விருது

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தமிழ்த்தேசியத் திருவிழாவில், பாவலர் மு.இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழ் எழுச்சிப்பாவலர் விருதினை இலக்குவனார் திருவள்ளுவன் வழங்குகிறார். உடன் தமிழ்க்காதலன், தமிழா தமிழா பாண்டியன், மூத்த தமிழறிஞர் அரு.கோபாலன், முதலானோர் உடனிருக்கின்றனர்.

அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்

அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…

தமிழவள்! – மு. இராமச்சந்திரன்

தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…

பேசின.. பேசின.. – மு. இராமச்சந்திரன்

பேசின.. பேசின.. அச்சமும் கவலையும் நோய்களும் பேசின அடிதடி கலகமும் வறுமையும்  பேசின மக்களும் பேசினர் மனத்தோடு அழுகையும் மறதியில் மறந்துமாய்ப் போக்குகளுமாய்.. வந்தவர் பேசினர் வாழ்க்கையின் நெருக்கமாய்   வாய்மட்டும் பேச்சுமாய் வறட்டுகள் புரட்டுமாய் கற்றவர் பேசினர் கலைகளும் இழப்புமாய் காலமும் பேசிட வம்புமாய் வழக்குமாய் எல்லாமும் பொதுவென்னும் ஏக்கமும் கலக்கமும் இன்னலே செய்கின்ற வழக்கமே வரவுமாய் நேர்மைகள் பேசின யாரோடும் கூட்டுமாய் நெகிழ்ச்சியில் ஆடின போதனையும் வழக்கமாய் அன்புமே பேசிட மொழியின்றித் தயக்கமாய் அறிவுமே ஆடுது தள்ளாட்ட முழக்கமாய் கொடுமைகள் கொடியேந்தி…

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033) தமிழர் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்   தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரை: பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர், …