சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! – ஆ. இரா.அமைதி ஆனந்தம்

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன  என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்! – மறைமலை இலக்குவனார்

வடமொழி வல்லாண்மையை முறியடிப்போம்!   வடக்கே ஆயிரம் மொழிகள் இருந்தாலும் வடமொழி என்னும் சொல் சமசுகிருதத்தையும் தெற்கே ஆயிரம் மொழிகள் நிலவினாலும் தென்மொழி என்பது தமிழையும் தொன்றுதொட்டுக் குறித்து வருகின்றன. தென்மொழியாகிய தமிழ், இன்றைய இந்தியாவின் தெற்குப்பகுதி முழுமையையும், இன்னும் கூடுதலாக, இன்றைய குமரிக்குத் தெற்கே நிலவிய நிலப்பகுதியையும் சேர்த்துத் தன் ஆளுகையில் கொண்டிருந்தது. தென்மொழி இயற்கையான மொழி. அக்காலத் தமிழரின் அறிவுவளர்ச்சியாலும், சிந்தனை முதிர்ச்சியாலும் இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் கொண்டு சிறந்தமொழி. வடமொழி செயற்கையான மொழி. வடநாட்டில் நிலவிய பிராகிருத மொழிகளின்…